| வாலிபரை கத்தியால் வெட்டியதம்பதி மீது வழக்கு: ஒருவர் கைது Dinamalar
வாலிபரை கத்தியால் வெட்டியதம்பதி மீது வழக்கு: ஒருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

30 மே
2020
23:02

விழுப்புரம்; முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் புறாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலசந்தர் மகன் பாபு, 21; இவரது பாட்டி வள்ளிக்கும், அவரது தங்கை கஸ்துாரிக்கும் சாப்பிடும்போது தகராறு ஏற்பட்டது. இதை வண்டிமேட்டைச் சேர்ந்த உறவினர் சங்கர் மனைவி கம்சலா, 44; என்பவர் வள்ளியிடம் கேட்டதால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், கடந்த 29ம் தேதி அப்பகுதியில் உள்ள கார்த்திகேயன் வீட்டின் முன் வந்த பாபுவை, சங்கர், 48; மற்றும் கம்சலா ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி கத்தியால் வெட்டினர்.இது குறித்த புகாரின்பேரில், சங்கர், கம்சலா மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X