| நெசவாளர்களுக்கு இ--பாஸ் கிடைக்குமா? Dinamalar
நெசவாளர்களுக்கு இ--பாஸ் கிடைக்குமா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2020
23:23

கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் பகுதியில் விசைத்தறிகள் இயங்குவதற்கு, பாவு நுால் கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் என விசைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கண்டாச்சிபுரம், சித்தாத்துார், வீரங்கிபுரம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 250க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் சொந்தமாகவும், கூலிக்கும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசின் தடை உத்தரவு காரணமாக விசைத்தறிகள் இயங்காத காரணத்தினால் கடந்த 2 மாதங்களாக நெசவாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.தற்போது போதுமான பாதுகாப்புகளோடு விசைத்தறிகள் இயங்குவதற்கு அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விசைத்தறி இயங்குவதற்குத் தேவையான மூலப்பொருட்களான பாவு மற்றும் நுால்கள் நெசவாளர்களிடம் கையிருப்பில் இல்லை. இவை சேலம், ஈரோடு, ஆரணி போன்ற பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தன.தற்போது உற்பத்தியாகியுள்ள சேலைகளை மொத்த வியாபாரிகளிடம் கொடுத்துவிட்டு, மறு உற்பத்திக்குத் தேவையான பாவு, நுால்களைக் கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் நெசவாளர்கள் உள்ளனர்.குறிப்பாக சேலம், ஈரோடு பகுதிகளுக்கு நுால் கொள்முதல் செய்யச்செல்லும் நெசவாளர்களுக்கு, அரசு உடனடியாக இ பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால், இப்பகுதியில் உள்ள 250க்கும் மேற்பட்ட நெசவாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் இதனால் பயனடைவர். எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நெசவாளர்களுக்குத் தேவையான அனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X