விழுப்புரம் கோட்டத்தில்1,057 அரசு பஸ்கள் இயக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2020
23:24

விழுப்புரம்; விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில், 1,057 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பஸ்கள் இயக்கப்படாமல், பணி மனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், ஊரடங்கில் தளர்வு அளிப்பட்டதால், 50 சதவீத பஸ்களை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்தில் 1,057 அரசு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்படுகிறது.இதில், டிரைவர், கண்டக்டர்களுக்கு தேவையான முக கவசம், கையுறை, சானிடைசர் போன்றவை வழங்கப்பட்டது. பஸ்களில் பயணிகள் பின் பக்கமாக ஏறி, முன் பக்கமாக இறங்கினர். பயணிகளுக்கு கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் பஸ் நிலையத்தில் ஏறும் பயணிகளுக்கு டிஜிட்டல் தெர்மா மீட்டர் மூலம் பரிசோதனை செய்தனர். நேற்று முதல் நாள் என்பதால், பஸ்சில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. தனியார் பஸ்கள் ஏதும் இயக்கப்படவில்லை.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X