திண்டிவனம் - செஞ்சி சாலையில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2020
23:25

திண்டிவனம்; திண்டிவனம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திண்டிவனம் அடுத்த உள்ள கொணக்கப்பட்டு கிராமத்தில், வேட்டைக்கார நாய்க்கர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 90 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீர், ஊர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியிலிருந்து சப்ளை செய்யப்படுகிறது.இந்த தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதால், வேட்டைக்கார நாய்க்கர் குடியிருப்பு பகுதிக்கு தனியாக கிணறு அமைத்து, குடிநீர் வழங்க வேண்டும் என, மயிலம் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பொது மக்கள் சார்பில் புகார் மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் ஊர் பகுதிக்கு புதியாக கிணறு அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேட்டைக்கார நாய்க்கர் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று மாலை 4:00 மணியளவில், திண்டிவனம் - செஞ்சி சாலையில் உள்ள கொணக்கப்பட்டு பகுதியில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ரோஷணை போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.அதனைத் தொடர்ந்து, 4:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X