அடாவடிபொன்பத்தி ஏரி நீரை வெளியேற்றி...தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2020
23:26

செஞ்சி; செஞ்சி நகரில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பொன்பத்தி ஏரியில் மீன் பிடிப்பதற்காக இரவோடு இரவாக நீரை வெளியேற்றி வருவதால் விரைவில் செஞ்சி நகரில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை உருவாகி வருகிறது.



செஞ்சி நகரின் நிலத்தடி நீருக்கு மிக முக்கிய ஆதாரமாக இருப்பது பொன்பத்தி ஏரி. 370 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரி செஞ்சி தாலுகாவில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று. செஞ்சி நகரையொட்டி உள்ள இந்த ஏரியில் இருந்து சக்கராபுரம், பொன்பத்தி, அஞ்சாஞ்சேரி பகுதியில் உள்ள 460 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.



கடந்த ஆண்டு குடிமராமத்து பணியாக 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏரியின் 2 மதகுகள் சீரமைக்கப்பட்டன. இந்த ஏரியின் பாசன வாய்க்கால்கள் துார்ந்ததால் கடைசி பகுதி வரை தண்ணீர் செல்வதில்லை. இதனால், 100 ஏக்கர் அளவிலான விளை நிலங்கள் மட்டுமே பாசனம் பெற்று வருகிறது. மற்ற விவசாயிகள் கிணற்றுப் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த கிணற்று பாசனத்திற்குத் தேவையான நிலத்தடி நீர் ஆதாரமாக பொன்பத்தி ஏரி தண்ணீரே உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் வெளியேறியது. அதன் பிறகு கடந்த ஆண்டு தான் ஏரி நிறைந்தது.இடைப்பட்ட ஆண்டில் ஏரியில் தண்ணீர் இல்லாமல் செஞ்சி நகரில் 500 அடி வரை போர் போடும் அவலம் ஏற்பட்டது. சுற்றுப்பகுதி விவசாய கிணறுகள் வறண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆண்டு முழுவதும் கரம்பாக இருந்தன.கடந்த ஆண்டு ஏரி நிரம்பியதும் விவசாயம் களைகட்டியது. ஏரியில் முழு அளவில் பாசன தேவை இல்லை என்பதால் ஒரு மதகில் இருந்து மட்டும் தண்ணீர் எடுத்து வந்தனர். கடந்த மாதம் வரை ஏரியின் நீரில் 25 சதவீதம் அளவிற்கே பாசனத்திற்கு பயன்படுத்தினர்.இதனால் ஏரியில் கோடையிலும் 60 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் இருந்தது. செஞ்சி நகரின் நிலத்தடி நீர் மட்டம் 50 அடிக்குள்ளாக நல்ல நிலையில் உள்ளது. இதற்கெல்லாம் கேடு விளைவிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக இரவோடு இரவாக மீன் பிடிக்க வசதியாக தண்ணீரை ஒருசிலர், சங்கராபரணி ஆற்றில் வெளியேற்றி வீணடித்து வருகின்றனர்.



கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 சதவீதம் தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். அடுத்த சில நாட்களில் எஞ்சியுள்ள தண்ணீரையும் வெளியேற்றி விடுவார்கள். அதன் பிறகு செஞ்சி, பொன்பத்தி பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். விவசாய கிணறுகளும் வறண்டு விவசாயமும் நசிந்து போகும்.இந்த அபாத்தான நிலை உருவாவதைத் தடுத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு அரிதாக கிடைத்துள்ள பொன்பத்தி ஏரி நீரை பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறையினரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மதகை கண்காணிப்பது யார்?


வழக்கமாக ஏரி மதகுகளை பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பார்கள்.இவர்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீரை திறந்து விட வேண்டும். ஆனால், செஞ்சி பகுதியில் உள்ள ஏரிகளில் மதகை பராமரிப்பதை தங்கள் சவுகரியம் போல் அந்தந்த பகுதியில் உள்ள வேண்டப்பட்டவர்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர்.அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மதகை திறப்பதும், மூடுவதுமாக உள்ளனர். எனவே, அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி மதகுகளை கண்காணிக்கும் பொறுப்பை பொதுப்பணித்துறையினர் ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X