கால்வாய் சேற்றில் சிக்கி வியாபாரி உயிரிழப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
கால்வாய் சேற்றில் சிக்கி வியாபாரி உயிரிழப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2020
23:28

கானாத்துா : பக்கிங்ஹாம் கால்வாயில் இறங்கிய காய்கறி வியாபாரி, சேற்றில் சிக்கி பலியானார்.கிழக்கு கடற்கரை சாலை, கானத்துாரைச் சேர்ந்தவர் சுயம்பு மார்த்தாண்டன், 52; காய்கறி வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் ஹேமதுல்லா, 26. இருவரும், பஸ் வசதி இல்லாததால், நேற்று முன்தினம் மாலை, சோழிங்கநல்லுார் செல்ல, பக்கிங்ஹாம் கால்வாயை கடக்க முயன்றுள்ளனர்.அப்போது, கால்வாய் சேற்றில் சிக்கி, சுயம்பு பலியானார். ஹேமதுல்லா, பலத்த காயத்துடன் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X