| இயங்காத, 'சிக்னல்' ; திணறும் போலீசார் Dinamalar
இயங்காத, 'சிக்னல்' ; திணறும் போலீசார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2020
23:29

தேனாம்பேட்டை : தேனாம்பேட்டையில், பிரதான சாலைகள் சந்திப்பில், 'சிக்னல்' இயங்காததால், வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.



தேனாம்பேட்டையில், அண்ணாசாலை - தியாகராயா சாலை சந்திப்பில், போக்குவரத்து சிக்னல் உள்ளது. உரிய பராமரிப்பு இல்லாததால், 20 நாட்களுக்கு முன் சிக்னல் பழுதடைந்தது. இது குறித்து, சிக்னல் பராமரிப்பாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிக்னலை சீரமைக்க தேவையான கேபிள்களை, போக்குவரத்து போலீசாரே வாங்கி தரக் கோரி பராமரிப்பாளர் கூறி வருவதாக கூறப்படுகிறது. இதனால், சிக்னல் சீரமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசார், தினமும் திணறி வருகின்றனர். உயிரிழப்பு அபாயமும் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X