பஸ் நிலைய காய்கறி கடைகளை அகற்ற மறுப்புநகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2020
23:35

கடலூர்; கடலூரில் நேற்று முதல் பஸ் ஓட துவங்கியுள்ள நிலையில், காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற மறுத்த வியாபாரிகள், நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க, விஸ்தீரமான பொது இடங்களில் மார்க்கெட்டுகள் மாற்றப்பட்டது. அந்த வகையில் கடலுார் உழவர் சந்தை மற்றும் திருப்பாதிரிபுலியூர் பான்பரி மார்க்கெட் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. அங்கு சுமார் 200 பேர் வியாபாரம் செய்து வந்தனர்.இந்நிலையில், பஸ் போக்குவரத்து துவங்க அரசு உத்தரவிட்டு நேற்று முதல் ஓட துவங்கியதால், பஸ் நிலையத்தில் இயங்கிய கடைகளை கடலுார்- சிதம்பரம் சாலையில் தனியார் இடத்தை மார்கெட் அமைக்க நகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். நேற்று காலை பஸ்கள் பஸ் நிலையத்திற்கு வந்த நிலையில், வழக்கம்போல் வியாபாரிகள் பஸ் நிலையத்தில் கடை வைத்து வியாபாரம் செய்தனர்.நகராட்சி மற்றும் போலீசார், வியாபாரிகளை அங்கிருந்து அகற்ற முயன்றனர். அப்போது, உடனடியாக எங்களால் மாற்று இடத்திற்கு செல்ல முடியாது, சிதம்பரம் சாலையில் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் கழிவறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை, பொதுமக்களும் அங்கு வரமாட்டார்கள். இதனால் எங்கள் வியாபாரம் பாதிக்கும்.எனவே, நாங்கள் ஏற்கனவே வியாபாரம் செய்த பான்பாரி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறி, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால், கடைகளை அகற்றும் பணியை கைவிட்ட நகராட்சி தரப்பினர், மாவட்ட நிர்வாகத்தினருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு சென்றனர்.அதையடுத்து, பஸ் நிலையத்திலேயே நேற்று கடைகள் வழக்கம்போல் இயங்கியது.இதுகுறித்து உழவர் சந்தை தரப்பிடம் கேட்டபோது, அரசு விதிகளின்படி தளர்வில் உழவர்சந்தை மூடியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் அறிவித்தால் உழவர்சந்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.ஆனால் ஊரடங்கு தளர்வில் கடலுார் உழவர் சந்தை திறக்க அறிவிப்பு ஏதும் இல்லாததால் வியாபாரிகள், விவசாயிகளை அனுமதிக்க முடியாது. இதற்கு மாற்றாக வேறு இடத்தை தான் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய முடியும் என, தெரிவித்தனர்.கடலுார் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து சென்ற நிலையில், காய்கறி மார்க்கெட்டும் இயங்கியதால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X