| மின்சார சட்டத்திற்கு எதிர்ப்பு வாரிய ஊழியர்கள் போராட்டம் Dinamalar
மின்சார சட்டத்திற்கு எதிர்ப்பு வாரிய ஊழியர்கள் போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2020
23:39

சென்னை : மின்சார சட்ட திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக மின் வாரியத்தின் அனைத்து அலுவலகங்களிலும், ஊழியர்கள், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசு, 2020 மின்சார சட்ட திருத்த வரைவு மசோதாவை வெளியிட்டு, அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்துக்களை கேட்டுள்ளது.மசோதாவில், மின் கட்டணத்திற்கான மானிய தொகையை, பயனாளிகளின் வங்கி கணக்கில், நேரடியாக செலுத்துவது உள்ளிட்ட, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த மசோதாவை திரும்ப பெறுமாறு, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.இந்நிலையில், வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னை, அண்ணா சாலையில் உள்ள, மின் வாரிய தலைமை அலுவலகம் முன், மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், ஊழியர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, மின் வாரிய அலுவலகங்கள், துணைமின் நிலையங்கள் முன், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதுகுறித்து, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், 'மின் வாரியத்தை பிரிப்பது, தனியார்மயமாக்குவது, இலவச மின்சாரம் ரத்து போன்ற அம்சங்களை உடைய, மின்சார சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்' என்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X