மாஞ்சா நுாலால் சிறுவன் காயம் | சென்னை செய்திகள் | Dinamalar
மாஞ்சா நுாலால் சிறுவன் காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2020
23:43

சூளைமேடு : மாஞ்சா நுாலால் சிறுவன் காயமடைவதற்கு காரணமான, வியாபாரிகள் இருவர் உட்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.



காற்றாடி விற்பது மட்டுமின்றி, அவற்றை விடுவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறை எச்சரித்தது. இருப்பினும், சிலர் ஆங்காங்கே காற்றாடி விட்டு வருகின்றனர்இந்நிலையில், நேற்று முன்தினம் சூளைமேடு, வன்னியர், இரண்டாவது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், பிரபல, 'டிவி'யின் கேமராமேனின், 3 வயது மகன், மாஞ்சா நுாலால் காயமடைந்தார். சம்பவம் அறிந்த சூளைமேடு போலீசார் விசாரித்தனர்.இதில், வியாபாரிகளான, பிரபாகரன், 29, லோக பாலன், 29, உள்ளிட்ட ஆறு பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து நேற்று, ஆறு பேரையும் கைது செய்த போலீசார், காற்றாடிகளை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X