போலாம்...போலாம்! புது வாழ்க்கையை துவக்க பஸ், ரயில்களில் பயணம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

02 ஜூன்
2020
02:03
பதிவு செய்த நாள்
ஜூன் 02,2020 00:36

கோவை:பஸ் போக்குவரத்து நேற்று துவங்கிய நிலையில், பஸ் ஸ்டாண்ட்கள், ரயில்வே ஸ்டேஷன் பழையபடி, அதிக பயணிகளால் களைகட்டி வருகிறது. சவாரி கிடைக்க துவங்கியிருப்பதால், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மாநிலம் முழுவதும், 50 சதவீத பஸ்கள், 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் அடங்கிய மண்டலத்திற்குள், கோவை கோட்டத்தில் இருந்து, 1,019 பஸ்கள் இயக்கப்படுகின்றன.


வெளியூர் செல்லும் பஸ்களில், 31 பயணிகளும், டவுன் பஸ்களில், 22 பயணிகளும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.பஸ் ஸ்டாண்டுகளில் உள்ளே வந்து செல்லும் பஸ்களுக்கு, கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அனைத்து பஸ்களிலும் பயணிகள் ஏறும் முன், காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும் என அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், ஒருசில பஸ்களில் மட்டுமே இந்த சோதனை நடந்தது.


கோவையில், 375 அரசு பஸ்கள் இயக்கப்படும் நிலையில், 200க்கும் அதிகமான டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து மேட்டுப்பாளையம், கரூர், சேலம், திருப்பூர், கோபி உள்ளிட்ட ஊர்களுக்கு, நேற்று மதியம் வரை, 90 பஸ்கள் இயக்கப்பட்டன. குறைந்த பயணிகள் அனுமதிக்கப்பட்டாலும், பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது.பஸ்களும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதால், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு அதிக சவாரி கிடைக்கத் துவங்கியுள்ளது. ஆக, நகரில் புதிய இயல்பு நிலைக்கு, மக்கள் மெல்ல திரும்பி வருகின்றனர்.சிறப்பு ரயில் இயக்கம்கோவை - மயிலாடுதுறை, கோவை - காட்பாடி இடையே, நேற்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.


கோவையில் இருந்து(02084) நேற்று காலை, 7:10 மணிக்கு புறப்பட்ட ஜன்சதாப்தி ரயிலில், 382 பயணிகள் உட்பட, இதர ஸ்டேஷன்களையும் சேர்த்து, 1,003 பேர் மயிலாடுதுறை சென்றனர்.அதே போல், கோவையில் இருந்து காலை, 6:15 மணிக்கு புறப்பட்ட இன்டர்சிட்டி ரயிலில்(02680), 116 பயணிகள் உட்பட மற்ற ஸ்டேஷன்களில் இருந்து, 463 பேர் காட்பாடி பயணித்துள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


இயல்பு நிலை திரும்புகிறதுஅரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பஸ்கள் இயக்கப்பட்டாலும் பயணிகள் கூட்டம், குறைந்த அளவே உள்ளது. பயணிகள் கூட்டம் அதிகரிக்க வேண்டுமானால், பள்ளி, கல்லுாரிகள் இயங்க வேண்டும். தொழிற்சாலைகள் முழுமையாக செயல்பட வேண்டும். கோவில்கள், சுற்றுலா தலங்கள் திறக்கப்பட வேண்டும்' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X