போலீஸ் செய்திகள்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
01:16

போலி நகை அடகு6 பேர் மீது வழக்குமதுரை: ஞானஒளிவுபுரத்தில் கரூர் வைஸ்ய வங்கி கிளையில் ஆரப்பாளையம் விஸ்வநாதன், பிரபு, அலெக்ஸ்பாண்டி ஆகியோர் 'தரமற்ற' நகைகளை அடகு வைத்து ரூ.14.8 லட்சம் கடன் வாங்கினர். தணிக்கை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் மீதும், நகை மதிப்பீட்டாளர்கள் கார்த்திக், மணிகண்டன், சண்முகரத்தினம் மீதும்மேலாளர் நவீன்குமார் புகாரின்படி கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மாணவர் பலிதிருமங்கலம்: செங்குளம் நாகலிங்கம் மகன் குகன்சங்கர் 17, தனியார் பள்ளியில் தற்போது 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார். நேற்று முன் தினம் காலை நெஞ்சுவலிப்பதாக கூறிய அவர் மயங்கி விழுந்தார். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.மது விற்ற மூவர் கைதுடி.கல்லுபட்டி: வன்னிவேலாம்பட்டியில் அனுமதியின்றி மது விற்ற பாண்டி 37, வேல்முருகன் 35, ஆகியோரை ரோந்து சென்ற டி.கல்லுபட்டி போலீசார் கைது செய்தனர். 34 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெரியகட்டளையில் மது விற்ற குருவுதாயை 33, கைது செய்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மூதாட்டி பலிசோழவந்தான்: சித்தாலங்குடி சுப்பையா மனைவி பிச்சையம்மாள்65, சில மாதங்களுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். இவரை, அப்பகுதியை சேர்ந்தபாலமுருகன் 45, மே., 30 இரவு போதையில் தகராறு செய்து தாக்கினார். பிச்சையம்மாளை மகன் செந்தில் மே.,31 மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். நேற்று காலை மயங்கி விழுந்த பிச்சையம்மாள் இறந்தார். பாலமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.டூவீலர் விபத்தில் டிரைவர் பலிஅலங்காநல்லுார்: மணியஞ்சிவேன் டிரைவர் பிரகாஷ்27, நேற்று முன்தினம் இரவு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) மதுரை சென்றார். குலமங்கலம் அருகே எதிரேவந்த வேன் மோதியது. இதில்காயமுற்ற பிரகாஷ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.பா.ஜ.,வினர் மீது வழக்குவாடிப்பட்டி: மத்திய அரசின் இரண்டாமாண்டு துவக்க விழா கொடியேற்றம் நடந்தது. ஊரடங்கின் போது அனுமதியின்றி கொடியேற்றியதாக மாநில விவசாய அணி தலைவர் மணி முத்தையா, மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன உள்ளிட்ட 5 பேர் மீதுபோலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X