காலியிடங்களால் குடியிருப்போர் நிம்மதி காலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
01:23

சாக்கடை கால்வாய் சிலாப் உடைப்புகவுண்டம்பாளையம், எஸ்.கே.ஆர்., நகர் இரண்டாவது வீதியில், சாக்கடை கால்வாய் சிலாப் உடைந்துள்ளது. இதன் அருகில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில், குப்பை கொட்ட வருவோர் தவறி விழும் அபாயம் உள்ளது.- கார்த்தி, எஸ்.கே.ஆர்., நகர்.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 62வது வார்டுக்கு உட்பட்ட, பாலசுந்தரம் லே-அவுட்டில் உள்ள, மின் கம்பங்களில், விளக்குகள் எரிவதில்லை.-தாரணி, பாலசுந்தரம் லே-அவுட்.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 97வது வார்டுக்கு உட்பட்ட, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, அன்னை இந்திரா நகர், நான்காவது வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 11), கடந்த சில மாதங்களாக விளக்கு எரிவதில்லை.- ஆனந்தகுமார், அன்னை இந்திரா நகர்.

முட்புதரானது காலியிடம்மேட்டுப்பாளையம், சிவன்புரம், திலகர் வீதியில் உள்ள, காலியிடம் முட்புதராக மாறி, விஷப்பூச்சிகளின் புகலிடமாக உள்ளது. இதில் இருந்து வெளியேறும் பூச்சிகள், வீடுகளுக்குள் நுழைவதால், இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.- ராமசந்திரன், திலகர் வீதி.

சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 60வது வார்டுக்கு உட்பட்ட, ஒண்டிப்புதுார், தாகூர் நகரில் உள்ள, சிறுவர் பூங்கா முன், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது; சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.- ரங்கராஜ், தாகூர் நகர்.

பிரதான குழாய் உடைப்பு; குடிநீர் வீண்கணபதி, கோபால்சாமி கோவில் வீதியில் உள்ள, அரசு உயர்நிலைப்பள்ளி அருகில், பிரதான குழாய் உடைப்பால், கடந்த இரு மாதங்களாக, குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. வடிகால் வாரியத்துக்கு, பலமுறை தகவல் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.- ஜெகன், கணபதி.

சாக்கடை துார்வாரணும்பாலக்காடு ரோடு, பி.கே. புதுார், முத்துசாமி சேர்வை வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு நீர் தேங்கியுள்ளது. கழிவு நீர் சீராக செல்ல, இக்கால் வாயை துார்வாரவண்டும்.- ராஜேந்திரகுமார், பி.கே.புதுார்.

ஆபத்தான மின் கம்பம்தடாகம் ரோடு, டி.வி.எஸ்., நகர், அன்னை அமிர்தானந்தா நகரில், மின் கம்பத்தின் மேல் பகுதி உடைந்து, விழும் நிலையில் உள்ளது; விழுந்து மின் விபத்து ஏற்படும் முன், இக்கம்பத்தை மாற்ற வேண்டும்.-ராஜா, அன்னை அமிர்தானந்தா நகர்.

குப்பை அள்ளுவதில்லைபொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம், சிட்கோ பஸ் ஸ்டாப் அருகில் வைக்கப்பட்டுள்ள தொட்டி, பயனற்ற நிலையில் சாய்ந்துள்ளது. இதனால், குப்பை சாலையோரம் சிதறியுள்ளது.- லோகநாதன், சிட்கோ.

ஆபத்தான மரம்ஆர்.எஸ்.புரம், ஆர்.ஆர்.லே-அவுட்டில், காய்ந்து பட்டுப்போன மரம், விழும் நிலையில் உள்ளது. சாலையில் செல்வோர் மீது, இம்மரம் விழுந்து விபத்து ஏற்படும் முன், இதை அகற்ற வேண்டும்.- ஜோதிமணி, ஆர்.எஸ்.புரம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X