| 'அம்மா' சிமென்ட் வினியோக குளறுபடி: மாவட்ட நிர்வாகத்துக்கு பயனாளிகள் புகார் Dinamalar
'அம்மா' சிமென்ட் வினியோக குளறுபடி: மாவட்ட நிர்வாகத்துக்கு பயனாளிகள் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
01:32

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியத்தில், 'அம்மா' சிமென்ட் வினியோக குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பயனாளிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியத்தில், மத்திய, மாநில அரசு திட்டங்களின் கீழ், பசுமை வீடு உட்பட கட்டுமான பணிகளை பயனாளிகள் மேற்கொள்கின்றனர். கிராமந்தோறும், வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள பயனாளிகளே, திட்டப்பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிகளுக்கு, மானிய விலையில், 'அம்மா' சிமென்ட் அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


இத்திட்டத்தில், ஒரு மூட்டை சிமென்ட், 190 ரூபாய்க்கு வழங்கப்படுவதால், மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. வினியோகத்தில் முறைகேடுகளை தவிர்க்க, ஒருங்கிணைந்த, 'சாப்ட்வேர்' அரசால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், கருத்துரு அடிப்படையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மூலம், குடிமங்கலம் ஒன்றியத்துக்கு, சிமென்ட் மூட்டைகள், ஒதுக்கீடு செய்யப்படுகிறது; ஆனால், முறையான பயனாளிகளுக்கு தேவையான போது சிமென்ட் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.இதனால், வீடு கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு, பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.


புகார் மனுவில், 'குடிமங்கலம் ஒன்றியத்துக்கு, ஒதுக்கீடு செய்யப்படும், 'அம்மா' சிமென்ட் மூட்டைகளின் எண்ணிக்கை; பயன்பெறும் பயனாளிகள், காத்திருப்போர் பட்டியல் ஆகியவற்றை வெளிப்படையாக, ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்படாததால், ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே 'அம்மா' சிமென்ட் வினியோகத்தில், முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திட்ட பயனாளிகள் முறையாக பயன்பெறும் வகையில், திருப்பூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசு மானிய திட்டங்களில், வீடு கட்டுவோர் கடனாளியாகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்; உண்மையான பயனாளிகள், வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு சிமென்ட் வாங்கும் நிலை தொடர்கதையாகி விடும்.இவ்வாறு, புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X