| மீண்டும் சம்பளம் நிலுவை: தொழிலாளர்கள் அதிருப்தி Dinamalar
மீண்டும் சம்பளம் நிலுவை: தொழிலாளர்கள் அதிருப்தி
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
01:45

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். ஏப்., தொடங்கி செப்., வரை ஆண்டு தோறும் அரவை பருவமாகும். நடப்பாண்டு அரவை ஏப்ரல் மாதம் 26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.இந்நிலையில், இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நான்கு (பிப்., மார்ச், ஏப்., மே) மாத சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளது.இதுகுறித்து அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தொழிலாளர்கள் கூறியதாவது: தற்போது ஊரடங்கு உள்ள நிலையில், சம்பளம் வழங்காததால் சிரமப்படுகிறோம். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட திணறி வருகிறோம். ஆனால், சூழ்நிலையை உணர்ந்து பணியில் ஈடுபடும் படி ஆலை நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதால், இதுவரை பொறுமை காத்தோம்.தற்போது எங்களது நிலை மிகவும் சிரமத்தில் உள்ளது. இதற்கு தீர்வாக உடனடியாக நிலுவையாக உள்ள, 4 மாத சம்பளத்தை வழங்க வேண்டும். தவறினால், நாளை (3ம் தேதி) கருப்பு பேட்ச் அணிந்து பணிக்கு செல்வோம். வரும் 4ம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். அதன் பின்பும் சம்பளம் வழங்க இழுபறி ஏற்பட்டால், ஒன்பதாம் தேதி காலை, 10:00 மணிக்கு ஆலை நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு, கூறினர். போராட்ட அறிவிப்பு குறித்த தகவல் தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட துறையினருக்கும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X