பயணிகள் இல்லாததால் காத்து வாங்கிய பஸ்கள்! இரு மண்டல எல்லையில் மக்கள் நடைபயணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
01:48

பொள்ளாச்சி, உடுமலையில், நேற்று முதல் பஸ்கள் இயங்க துவங்கின; பயணிகள் வருகை இல்லாததால், பெரும்பாலான பஸ்கள் காலியாக காணப்பட்டன.'கொரோனா' ஊரடங்கு காரணமாக, மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பஸ்களும் நிறுத்தப்பட்டன. 68 நாட்களுக்கு பின், நேற்று பஸ்கள் இயக்கப்பட்டன.மண்டலங்களாக பிரித்து, 50 சதவீதம் பஸ்கள், 60 சதவீதம் பயணிகளுடன் இயக்க அரசு அனுமதியளித்தது.உடுமலை அரசு போக்குவரத்துக்கழக கிளையில், 101 பஸ்கள் உள்ளன. இதில், 26 அரசு வழித்தடங்களில் டவுன் பஸ்களும், 15 வழித்தடங்களில் புற நகர பஸ்கள், என 31 பஸ்கள் நேற்று காலை இயக்கப்பட்டன.பஸ் டிரைவர், கண்டக்டருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு பணிக்கு அனுப்பினர். பஸ் ஸ்டாண்டில், முகக்கவசம் அணிந்து வந்த பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பின் புறம் உள்ள ஏறும் வழித்தடத்தில், கண்டக்டர் மூலம் 'சானிடைசர்' வழங்கப்பட்டது.திருப்பூர் செல்லும் பஸ்களை தவிர, பெரும்பாலான பஸ்களில், ஒன்றிரண்டு பயணிகளை தவிர யாரும் ஏறவில்லை.மதியத்திற்கு மேல், கூட்டம் இல்லாததால் வழித்தடங்களில் இயங்கிய ஏழு டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டன.குழப்பம் திருப்பூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையாக, மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. திண்டுக்கல் வேறு மண்டலமாக உள்ளதால், கோவை - பழநி வழித்தடத்தில் பஸ்கள் இயங்கவில்லை.திருப்பூர் மாவட்ட பஸ்கள், மடத்துக்குளம் வரையும், திண்டுக்கல் பழநி பஸ்கள், சாமிநாதபுரம் வரையும் இயக்கப்பட்டன. தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களும், அத்தியாவசிய பணிகளுக்கும் இரு மாவட்ட மக்களும் வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அடுத்த மண்டலத்துக்கு மக்கள் நடந்து சென்று பஸ் ஏறினர். அதே போல், திருப்பூர் மாவட்டத்திலுள்ள, மடத்துார், மயிலாபுரம் கிராமங்களுக்கு, கொழுமம் அமராவதி ஆற்றுப்பாலம், திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு சோதனை சாவடி வழியாக செல்ல வேண்டும்.தற்போது, மண்டலம் மாறினாலும், அக்கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இரு மாவட்ட எல்லை பகுதிகளில் மட்டுமாவது, பஸ்களை இயக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில்,' பயணிகள் வருகை குறைவாக இருந்ததால், வழித்தடங்களில் காலியாகவே இயங்கின. ஓடிய டீசலுக்கு கூட கட்டுப்படியாகாது. முதல் நாள் என்பதால், குறைவாக இருக்கும். வரும் நாட்களில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது,' என்றனர்.பொள்ளாச்சிபொள்ளாச்சியில், நேற்று முதல், 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களின் இருக்கை எண்ணிக்கையில், 60 சதவீத அளவுக்கு பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர்.பஸ்களில் ஏறும் முன், பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, கைகளுக்கு சானிடைசர் அளித்து அனுமதிக்கப்பட்டனர்.அண்டை மாநிலமான கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அதே போல், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களுக்குள் மட்டுமே பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.இதனால், பொள்ளாச்சியில்இருந்து பழநிக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை; பழநி பஸ்கள் உடுமலையுடன் நிறுத்தப்பட்டன.பஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 50 சதவீத கண்டக்டர், டிரைவர்கள் மட்டுமே பணிக்கு அழைக்கப்பட்டனர். பஸ்கள் ஒவ்வொறு முறை பயணம் முடிந்து பஸ் ஸ்டாண்ட் வந்ததும், உள்ளும், புறமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பயணிகள், கண்டக்டர், டிரைவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருந்தனர்.பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயங்கியும், பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. தனியார் பஸ்கள் இயக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பஸ் உரிமையாளர்கள் பஸ் இயக்கவில்லை. போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:தியேட்டர்கள், கோவில்கள், பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் என வர்த்தக நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. திருமணங்கள், துக்க நிகழ்ச்சிகளில் ஆட்கள் கூட கட்டுப்பாடு உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு பயணிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.மருத்துவ தேவை, பணி நிமித்தமாக பயணிப்பவர்கள் மட்டுமே பஸ்களை பயன்படுத்துவதால், கூட்டம் குறைவாக காணப்படுகிறது.குறிப்பிட்ட வழித்தடத்தில் கூட்டம் அதிகரித்தால், பஸ்கள் சென்று வரும் 'டிரிப்'களை அதிகரித்து, சமாளிக்க திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.வால்பாறைவால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் பொள்ளாச்சிக்கு, 4 பஸ்களும், எஸ்டேட் பகுதிகளுக்கும் 6 பஸ்களும் இயக்கப்பட்டன.மொத்தம், 10 ரூட்களில் பஸ் இயக்கப்படுகின்றன. ஒரு பஸ்சில், 25 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.- நிருபர் குழு -

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X