நீரேற்று நிலைய பணி பூமி பூஜையுடன் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
01:49

கிணத்துக்கடவு:நெகமம் அருகேயுள்ள கப்பளாங்கரையில், நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு ஒன்றியத்திலுள்ள, 212 கிராமங்களுக்கான, கூட்டு குடிநீர் திட்டம், 76 கோடி ரூபாய் மதிப்பில் அறிவிக்கப்பட்டு, கடந்தாண்டு நவ., மாதம் பணிகள் துவங்கப்பட்டன.அம்பராம்பாளையம் குளத்துாரில், ஆழியாறு ஆற்றில், நீர் எடுத்து சுத்திகரித்து வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டதில், நெகமம் அருகேயுள்ள கப்பளாங்கரை, கே.வி.கே., நகரில், 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் தேவி முன்னிலை வகித்தார். துணை சபாநாயகர் ஜெயராமன் பங்கேற்று பூமி பூஜையை துவக்கி வைத்தார்.புதிதாக அமைய உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து, கப்பளாங்கரை, சிறுக்களந்தை, ஜக்கார்பாளையம், காட்டம்பட்டி, பெரியகளந்தை, மன்றாம்பாளையம் போன்ற ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவுள்ளது.நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு ஒன்றியக்குழுத் தலைவர் நாகராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குழந்தைசாமி, சாய்ராஜ், தாசில்தார் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X