டிக்கெட் இல்லா பஸ் சென்னையில் அறிமுகம் | சென்னை செய்திகள் | Dinamalar
டிக்கெட் இல்லா பஸ் சென்னையில் அறிமுகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
07:25

சென்னை : கொரோனா தொற்று மண்டலமாக மாறி வரும் சென்னையில், பணப் பரிவர்த்தனையை தவிர்க்கும் வகையில், டிக்கெட்டில்லாத பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், தலைமைச் செயலக ஊழியர்களும் தப்பவில்லை என்பது, சமீப சோதனைகளில் தெரிய வந்துள்ளது.எனவே, தலைமைச் செயலக ஊழியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபடும் மாநகர பஸ்களில், பணப் பரிவர்த்தனையை தவிர்க்க, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதன் முதல்கட்டமாக, இரண்டு பஸ்களில், 'பேடிஎம், கூகுள் பே' வழியாக டிக்கெட் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தி.நகர் மற்றும் தாடண்டர் நகரில் இருந்து புறப்படும் இரண்டு பஸ்களில், இந்த சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. இதில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, சென்னையில் இயங்கும், 300 பஸ்களிலும் இம்முறை செயல்படுத்தப்பட உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X