கிருஷ்ணா கால்வாயில் மோட்டார் மூலம் திருட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
21:56

திருவள்ளூர்: ஆந்திர மாநில பகுதியில், கிருஷ்ணா கால்வாயில், மோட்டார் மூலம் விவசாயிகள் பகிரங்கமாக தண்ணீரை உறிஞ்சி, விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.



சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.ராப்பூர், வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியாக, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, 'ஜீரோ பாயின்ட்'டை சாய் கங்கை கால்வாய் வழியாக வந்தடைகிறது.அங்கிருந்து போந்தவாக்கம், ஒதப்பை வழியாக, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு இந்த தண்ணீர் கொண்டு வரப்பட்டு, சேகரிக்கப்படுகிறது.



இந்த நிலையில், ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்து உள்ள கிருஷ்ணா கால்வாயில், விவசாயிகள் தங்கள் விவசாய தேவைக்கான தண்ணீரை, மோட்டார் இயந்திரங்கள் மூலம், பகிரங்கமாக எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, கிருஷ்ணா கால்வாயில் அனுமதியின்றி தண்ணீர் உறிஞ்சும் விவசாயிகளின் மோட்டாரை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.



சென்னைக்கு நீர் திறப்புபூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 3.2 டி.எம்.சி.,யில், தற்போது, 0.3 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது.நீர்த்தேக்கத்திற்கு தற்போது, வினாடிக்கு, 195 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, இணைப்பு கால்வாய் மூலம், புழல் ஏரிக்கு, வினாடிக்கு, 327 கன வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
03-ஜூன்-202003:01:43 IST Report Abuse
NicoleThomson ஆனா இந்த திருடர்களுக்கு தமிழகம் தா காசு கொடுக்கவேண்டும் என்று ஜெகன் சொல்வான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X