| மது பாட்டில்கள் பறிமுதல் Dinamalar
மது பாட்டில்கள் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
22:06

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை போலீசார், தொட்டாரெட்டிகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு, சாலையில் நின்று இருந்த நபரை விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், சந்தேகம் அடைந்த போலீசார், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 150 மதுபாட்டில்கள் இருந்தன.விசாரித்ததில், அவர் பெரம்பூரைச் சேர்ந்த பிரான்சிஸ், 35 என்பது தெரிந்தது. போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X