| ஊத்துக்கோட்டை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பெண் பலி Dinamalar
ஊத்துக்கோட்டை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பெண் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
22:08

ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில், இரவு நேரங்களில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால், நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.



ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களின் மருத்துவ தேவைக்கு செல்கின்றனர். இங்கு, நான்கு மருத்துவர்கள் உள்ளனர்.பல்வேறு கிராமங்களில் இருந்து, தினமும், 350க்கும் மேற்பட்ட நோயாளிகள், சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது, கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.



இதன் காரணமாக, தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால், மருத்துவ தேவைக்கு அரசு மருத்துவமனைக்கு மட்டுமே வர வேண்டிய நிலை உள்ளது.தினமும், ஒரு மருத்துவர் மட்டுமே பணிக்கு வருகிறார். அவரும், மாலை, 5:00 மணிக்கு வீட்டிற்கு சென்று விடுகிறார்.நேற்று முன்தினம் இரவு, சர்க்கரை நோயாளி பெண் ஒருவர், சிகிச்சைக்கு வந்த போது மருத்துவர்கள் அங்கு இல்லை. செவிலியர்கள் மட்டும் இருந்துள்ளனர்.



மருத்துவர்கள் தற்போது இல்லாததால், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என, கூறியுள்ளனர். ஆம்புலன்சும் இல்லாததால், அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.ஒரு மணி நேரத்திற்கு பின், ஆம்புலன்ஸ் வந்தபின், அவர் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்; அங்கு அவர் இறந்தார்.எனவே, கலெக்டர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், முறையாக பணிக்கு வர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X