அனைவரும் பணிக்கு வர பொ.ப., துறை உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
22:45

சென்னை : சென்னையில், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படாத நிலையில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் அனைவரும், இன்று பணிக்கு திரும்ப வேண்டும் என, அதிகாரிகள் உத்தரவிட்டுஉள்ளனர்.



சென்னை, சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில், நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணியில் உள்ளனர். ஊரடங்கு காரணமாக, 50 சதவீத பணியாளர்களுடன் பொதுப்பணித்துறை அலுவலகம் இயங்கி வந்தது. மீத ஊழியர்கள், வீட்டில் இருந்தபடியே தங்கள் பணிகளை செய்து வந்தனர். இந்நிலையில், அனைத்து ஊழியர்களும் இன்று முதல் பணிக்கு திரும்ப, உயர் அதிகாரிகள் உத்தரவுபிறப்பித்துள்ளனர். இதனால், ஊழியர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



ஊழியர்கள் பலரும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து, அரசு ஊழியர்கள் குடியிருப்புகள், அடுக்கு மாடிகள், வாடகை வீடுகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் பெரும்பாலும், மாடி ரயில் மற்றும் மாநகர போக்குவரத்து கழக பஸ்களை நம்பியுள்ளனர். ஆனால், சென்னையில் மாடி ரயில் சேவை இன்னும் துவங்கவில்லை. குறைந்த அளவிலேயே மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.



சென்னையில், பொது போக்குவரத்து இன்னும் இயல்பு நிலையை அடையவில்லை. கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால், சமூக விலகலை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில், ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என, அதிகாரிகள் பிறப்பித்துள்ள உத்தரவு, பொதுப்பணித்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X