இரண்டாவது நாளாக அரசு பஸ்கள் குறைவான பயணிகளுடன் இயக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
22:59

திண்டிவனம்; திண்டிவனம் பகுதியில், 2வது நாளாக அரசு பஸ்கள் பயணிகள்இன்றி இயக்கப்பட்டது.கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு, அரசு போக்குவரத்துக்கழகம் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில், நேற்று முன்தினம் முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.இதில், விழுப்புரத்திலிருந்து திண்டிவனம், வந்தவாசி, திருவண்ணாமலை, செஞ்சி உள்ளிட்டஊர்களுக்கும், திண்டிவனத்திலிருந்து கடலுார் வழியாக சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.இரண்டு மாதத்திற்கு பிறகு, அரசு பஸ்கள் இயக்கப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.இந்நிலையில், முதல் நாளன்று, விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் மற்றும் திண்டிவனத்திலிருந்து சிதம்பரம், திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி, கடலுார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்களில், பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.இரண்டாவது நாளான நேற்றும், விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் வரையிலான பஸ்கள் மற்றும் திண்டிவனத்திலிருது விழுப்புரம், சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை நேற்று முன்தினம் போன்றே குறைவாக இருந்தது.இதுகுறித்து அரசு பஸ் கண்டக்டர்கள் கூறுகையில், 'காலை நேரமான அலுவலக நேரம் மற்றும் மாலை நேரத்தில் மட்டும் பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். மற்ற நேரங்களில் பயணிகள் வருகை குறைவாக உள்ளது. பலர் கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக பஸ்களில் பயணம் செய்வதற்கு தயங்குகின்றனர்' என்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X