பகலிலும் விளக்குகளால் மின்னுது பொன்னுசாமி நகர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
00:06

விளக்கு எரிவதில்லைதிருச்சி ரோடு, சவுரிபாளையம் பிரிவு ரோட்டில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 31), கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, விளக்கு எரிவதில்லை.- பிரபா, சவுரிபாளையம்.

உழைப்பாளர் வீதியில் சுகாதாரகேடுவெள்ளக்கிணறு, உழைப்பாளர் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- தங்கராஜ், வெள்ளக்கிணறு.

கொசு உற்பத்திவடவள்ளி, வள்ளலுார் நகர், தக் ஷா அபார்ட்மென்ட், முன் குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகி, சாலையில் தேங்குகிறது. இதில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்களால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- நரசிம்மன், வள்ளலார் நகர்.

ரோடு மோசம்திருமலையாம்பாளையம், குமிட்டிபதி, சின்னதம்பி கவுண்டர் வீதியில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. குழிகளுக்குள் விழுவதை தடுக்க, கற்கள் வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.- உமா, சின்னதம்பி கவுண்டர் வீதி.

ரோடெல்லாம் கழிவுநீர்தொப்பம்பட்டி, நேரு நகர், லட்சுமி நகர் விரிவாக்கத்தில் இணைப்பு சாலையில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது; சாக்கடை கால்வாயை துார்வார வேண்டும்.- ஸ்ரீதேவி, லட்சுமிநகர் விரிவாக்கம்.

மின் கம்பத்தை மாற்றணும்பீளமேடு, முருகன் நகரில் உள்ள, மின் கம்பம்(எண்: 52), சிதிலமடைந்துள்ளது. இக்கம்பத்தை, அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- உமாவதி, முருகன் நகர்.

பள்ளி அருகில் குப்பை அள்ளுவதில்லைரத்தினபுரி, சங்கனுார் ரோடு, கண்ணப்பன் நகரில், சாலையோரம் குவியும் குப்பை முறையாக அள்ளப்படுவதில்லை.- சதீஷ்குமார், ரத்தினபுரி.

தெருவிளக்கு வசதியில்லைசுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குரும்பபாளையம் பிரிவில் இருந்து, ஈச்சனாரி செல்லும் ரோடு, சென்னை சில்க்ஸ் காலனியில், தெருவிளக்கு வசதி இல்லை. இதனால், இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.- சரண்யா,

ஈச்சனாரி ரோடு.

பயனற்ற பொதுக்கழிப்பிடம்சூலுார், ஒன்றாவது வார்டில் உள்ள, பொதுக்கழிப்பிடம், பராமரிப்பின்றி, பயனற்ற நிலையில் உள்ளது. இதை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.- சூர்யா, சூலுார்.

சாக்கடையை துார்வாரணும்ஆவராம்பாளையம், ராமசாமி லே-அவுட்டில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ராஜி, ஆவராம்பாளையம்.

துர்நாற்றம் தாங்கலஆர்.எஸ்.புரம், கவுலிபிரவுன் ரோடு, உழவர் சந்தை அருகில், சாலையோரம் குவிந்துள்ள குப்பையால், துர்நாற்றம் வீசுகிறது.- மோகனசுந்தரம், ஆர்.எஸ்.புரம்.

ஆபத்தான மின் கம்பம்பொம்மண்ணம்பாளையம் பிரதான ரோட்டில் உள்ள, மின் கம்பம்(எண்: 58), சிதிலமடைந்துள்ளது. இக்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.- அசோக்ராஜ், பொம்மண்ணம்பாளையம்.

போர்வெல் ஆழ்துளை கிணறால் ஆபத்துமேட்டுப்பாளையம் ரோடு, துடியலுார், நெல்லை பெரிய லாலா கார்னர் ஸ்வீட் கடை முன், போர்வெல் ஆழ்துளை கிணறு, கற்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதை முறையாக மூட வேண்டும்.- கார்த்தி,

துடியலுார்.

பகலிலும் ஒளிருது தெருவிளக்குபாப்பநாயக்கன்புதுார், பொன்னுசாமி நகரில், தெருவிளக்குகள், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, பகலிலும் எரிந்து கொண்டிருக்கின்றன; மின்சாரம் வீணாகிறது.- ரவி, பொன்னுசாமி நகர்.

குப்பை குவியல்மாநகராட்சி, 7வது வார்டுக்கு உட்பட்ட, தடாகம் ரோடு, இடையர்பாளையம் - வடவள்ளி இணைப்பு சாலையில், செயின்ட் மேரீஸ் உயர்நிலைப்பள்ளி அருகில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை அருகிலேயே குப்பை குவிக்கப்படுகிறது.- ரவீந்திரன்,

வடவள்ளி.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X