10ம் வகுப்பு தேர்வு ஏற்பாடு தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
00:53

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்வதற்கு, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள், ஜூன் 15ம்தேதி முதல் 25ம்தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கு மாணவர்கள் பாதுகாப்பான முறையில் வந்து செல்வதற்கும், துாய்மையான சூழலில் தேர்வு எழுதுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.பத்தாம் வகுப்புகள் செயல்படும் அனைத்து, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் முழுவதையும், தேர்வுக்கு தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, உடுமலை கல்வி மாவட்டத்தில், 60 பள்ளிகள் தயாராக வைத்திருக்க வேண்டியுள்ளது.மேலும், வேறு வேறு மண்டலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுத வருவதற்கு இ-பாஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.தேர்வு நடக்கும் மையங்களில், மாணவர் எண்ணிக்கைக்கு போதுமான அளவு தேர்வறைகள் இருப்பதும், மையங்களுக்கு போதுமான அளவு கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் நியமிக்கப்படுவது குறித்தும் கல்வி மாவட்ட அலுவலர்கள் தயார்படுத்தியிருக்க வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து, தேர்வு எழுத வரும் விடுதி மாணவர்கள், ஜூன் 11ம் தேதி விடுதிகளுக்கு வந்திருக்க வேண்டும். அவர்கள், தங்குவதற்கான விடுதிகள் துாய்மையாக இருப்பதையும், மாணவர்கள் அன்று விடுதிக்கு வந்திருப்பதையும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணித்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.அன்றைய நாளில் விடுதிக்கு வராத மாணவர்கள் குறித்த விபரங்களை, கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X