| காரைக்குடியில் குழாய் உடைந்தது: வீணான குடிநீர் Dinamalar
காரைக்குடியில் குழாய் உடைந்தது: வீணான குடிநீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
00:54

காரைக்குடி:காரைக்குடியில் நடக்கும் பாதாளச் சாக்கடைதிட்டத்தால் அடிக்கடி குடிநீர் குழாய் உடைவது தொடர் கதையாகஉள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.



காரைக்குடி நகராட்சியில், பாதாள சாக்கடை அமைக்கும்திட்டம் நடந்து வருகிறது. குழாய் பதிக்கும் பணி70 சதவீதம் முடிந்த நிலையில், தற்போது, முக்கியச்சாலைகளில் தொட்டிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பெரியார் சிலை, செக்காலை ரோடு, ஐந்துவிளக்கு பகுதிகளைதொடர்ந்து, தற்போது, முதல் பீட், சிக்னலில் பணி நடந்து வருகிறது.



நேற்று அதிகாலை 5:00 மணிக்கு குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் ரோட்டில் ஓடியது. அங்கிருந்து பழைய பஸ்ஸ்டாண்ட் வரையிலும் தண்ணீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடிவீணானது. இதேபோல, நகரின் பல இடங்களிலும் குழாய் உடைப்புஏற்பட்டு குடிநீர் வீணாவது தொடர்கதையாக உள்ளதாக மக்கள்தெரிவிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X