மாம்பழ சீசன் துவங்கியது: மகசூல், விலை சரிவால் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
00:54

உடுமலை:மாம்பழம் சீசன் துவங்கியுள்ள நிலையில், நடப்பாண்டு மகசூலும், விலையும் குறைந்து விவசாயிகள் பாதித்துள்ளனர்.உடுமலை பகுதிகளில், கல்லாபுரம், கொழுமம், அமராவதி, ஜல்லிபட்டி உள்ளிட்ட பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நீலா, கல்லாமணி, அல்போன்சா, மல்கோவா, நடுச்சாளை, செந்துாரம், பங்கனப்பள்ளி, காலாம்பாடி, இமாம் பாஸ் என பல்வேறு வகையான மாம்பழங்கள் வரத்து காணப்படும். ஏப்., முதல் ஆக., வரை மாம்பழம் சீசன் காலமாகும்.



உற்பத்தியாகும் மாம்பழங்கள், பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்லும்.நடப்பாண்டு, மழை குறைவு, வெயிலின் தாக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால், மகசூல் குறைந்துள்ளது. உற்பத்தி குறைந்துள்ள நிலையில், 'கொரோனா' ஊரடங்கு காரணமாக, விற்பனையும் குறைந்துள்ளதால், மாம்பழம் சாகுபடி செய்த விவசாயிகள் பாதித்துள்ளனர்.


விவசாயிகள் கூறியதாவது:ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மகசூல் கொடுக்கும், மாம்பழம் சாகுபடியில் தற்போது, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, ஏக்கருக்கு, ஆறு டன் மகசூல் இருக்கும். நடப்பு சீசனில், 2 டன் மகசூல் மட்டுமே கிடைத்துள்ளது.சிறிய ரகம் முதல் உயர் ரகம் வரை, ரகத்திற்கு ஏற்ப, கிலோ, 40 முதல் 180 ரூபாய் வரை மாம்பழம் விற்கும். தற்போது, ஊரடங்கு காரணமாக விற்பனை குறைவு, வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்லாததால், உற்பத்தியான மாம்பழங்கள் அதிகளவு தேங்குகின்றன.


இதனால், கடந்த ஆண்டை விட, 80 சதவீதம் வரை விலை குறைந்து, தற்போது, கிலோ, 20 முதல் 40 ரூபாய் வரை மட்டுமே விற்கிறது. அதே போல், மாங்காய்களும், கிலோ, 7 முதல் 12 ரூபாய் மட்டுமே விற்கிறது.இதனால், மாம்பழம் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாம்பழம் இருப்பு வசதி, மாம்பழ கூழ், சாறு உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கவும், எளிதான விற்பனை வசதிகள் செய்து தர வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X