ஊரடங்கு கால சம்பளம் போராட்டம் ஒத்திவைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
01:02

வால்பாறை:வால்பாறை அடுத்துள்ள சின்கோனா டான்டீ தொழிலாளர்களுக்கு, ஊரடங்கு கால சம்பள பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும், என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா (டான்டீ) அரசு தேயிலை தோட்டம். இங்குள்ள லாசன், ரயான் கோட்டங்களில், 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையால், பணிக்கு செல்லாத, 14 நாட்களுக்குக்கான சம்பளம் வழங்குவது தொடர்பாக, சின்கோனா டான்டீ அலுவலகத்தில் பேச்சு நடந்தது.நிர்வாகம் சார்பில், மேலாண்மை இயக்குனர் ஸ்ரீநிவாசன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படாததால் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.இதனிடையே, தொழிலாளர்களிடம் பேச்சு நடத்திய வால்பாறை போலீசார், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தற்போது போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர்.இந்நிலையில், வால்பாறை தோட்ட நிறுவனங்களின் ஆய்வாளர் சிவக்குமார், டான்டீ கோட்ட மேலாளர் விக்ரம் ஆகியோர், தொழிலாளர்களிடம் பேச்சு நடத்தினர்.அதில், விரைவில் தொழிலாளர்களுக்கான சம்பளம் பெற்றுத்தரப்படும். வரும், 5ம் தேதிக்குள் நல்ல முடிவு தெரிவிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.இதனையடுத்து, உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.நிலுவை தொகை மறுப்புதொழிலாளர்கள் கூறுகையில், 'டான்டீயில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுளாக விடுப்பு சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்குவதில்லை.நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட சம்பளத்துக்கான நிலுவை தொகையும் வழங்கவில்லை. தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் கூட டான்டீ தொழிலாளர்களுக்கு வழங்குவதில்லை,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X