'ஆழியாறு நீரை பகிர்ந்தளிக்க கூடாது': புதிய ஆயக்கட்டு விவசாயிகள் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
01:03

பொள்ளாச்சி:'ஆழியாறு புதிய ஆயக்கட்டுக்கு உரித்தான பாசன நீரினை பகிர்ந்தளிக்க கூடாது,' என, ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் வலியுறுத்தினர்.ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் செயலாளர் செந்தில், பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமியிடம் மனு கொடுத்தார்.மனுவில் கூறியிருப்பதாவது:ஆழியாறு, திருமூர்த்தி புதிய ஆயக்கட்டானது, பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் இருந்தாலும், இரண்டுக்குமான பாசன முறை, கால்வாய் அமைப்பு மற்றும் நீர் அளவீடுகள் வேறுபட்டதாகும்.


ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஒரு ஆண்டில், ஒரு முறை மட்டும் அரசாணை பெற்று நீர் வழங்கப்படுகிறது. ஆனால், திருமூர்த்தி பாசனத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை, இரு மண்டலங்களுக்கு அரசாணை பெற்று பாசனம் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், ஆழியாறு புதிய ஆயக்கட்டுக்கு ஓரளவு முழுமையான பாசனத்துக்கு, 2.88 டி.எம்.சி., நீர் தேவைப்படும்.ஆழியாறு பாசனத்தில் அணை கட்டும் போது இருந்த, ஆயக்கட்டு பூமியை விட கூடுதலாக இதுவரை சேர்க்கப்படவில்லை.திருமூர்த்தி பாசனத்தில் மாறுபட்ட அரசியல் சூழ்நிலை மற்றும் நிர்பந்தங்களால் சரியாக திட்டமிடாமல் அதிகரிக்கப்பட்ட ஆயக்கட்டு பகுதியால், பாசன நீர் பற்றாக்குறை ஏற்படுவது அப்பகுதி விவசாயிகள் மற்றும் தலைவர்களுக்கு தெரியும்.ஆனால், ஆழியாறு புதிய ஆயக்கட்டுக்கு பரம்பிக்குளத்தில் இருந்து அதிகமாக நீர் தருவதே தங்களை பாதிக்கிறது என திருமூர்த்தி பாசன விவசாயிகளிடம் சிலர் திட்டமிட்டே தவறான கருத்துக்களை பரப்புகின்றனர்.


இதன் அழுத்தம் காரணமாக கடந்த, 10 ஆண்டுகளில் ஆழியாறு புதிய ஆயக்கட்டுக்கு உரித்தான முழுமையான நீரை உரிய நேரத்தில், பரம்பிக்குளத்தில் இருந்து பீடர் கால்வாய் வழியாக இறக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.திருமூர்த்தி பாசனத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆயக்கட்டுக்கு அப்பகுதியின் நீரை பகிர வேண்டுமே தவிர, ஆழியாறு புதிய ஆயக்கட்டுக்கு உரித்தான நீரை பகிர்ந்தளிக்க கூடாது.இது சம்பந்தமாக அரசு மற்றும் அதிகாரிகள் உண்மை நிலையறிந்து, அந்தந்த பகுதிக்கு உண்டான நீரை மற்ற பகுதியோடு ஒப்பிடாமல் வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X