கோவை பஸ்களில் எகிறியது பயணிகள் கூட்டம்: கூடுதலாக இயக்க மக்கள் எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

03 ஜூன்
2020
01:37
பதிவு செய்த நாள்
ஜூன் 03,2020 01:07

பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து, கோவை சென்ற பஸ்களில் நேற்று எதிர்பார்த்ததை விட, அதிக பயணிகள் கூட்டம் அலைமோதியது. கூடுதல் பஸ்கள் இயக்கி நிலைமை சமாளிக்கப்பட்டடது.



தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் தவிர, பிற பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் பஸ் போக்குவரத்து துவக்கப்பட்டது. முதல் கட்டமாக, 50 சதவீத பஸ்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.முதல் நாளில், பொள்ளாச்சியில் இருந்து சென்ற பஸ்களில் பயணிகள் மிககுறைவாக இருந்ததால் காற்று வாங்கின.குறிப்பாக, எப்போதும் கூட்டத்துடன் காணப்படும் பொள்ளாச்சி - கோவை பஸ்களிலும் கூட்டம் இல்லை. இதனால், முதல் நாளில் கோவைக்கு இயக்கப்பட்ட, 80 பஸ்கள், இரண்டாம் நாளான நேற்று, 55 ஆக குறைக்கப்பட்டன.




ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், கோவை பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தனிமனித இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல், போக்குவரத்து கழக பணியாளர்கள் திணறினர்.இதையடுத்து, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு காலையில் ஆசிரியர்களை அழைத்துச் சென்ற பஸ்கள் அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டு, கோவைக்கு இயக்கப்பட்டன.போக்குவரத்து கழக அதிகாரிகள் நேரடியாக வந்து, பயணிகளை ஒழுங்குபடுத்தி, வரிசையில் பஸ் ஏற்றினர்.



பஸ் போக்குவரத்து துவங்கப்பட்ட முதல் நாளில், நிலவரத்தை தெரிந்து கொண்ட பின், பயணத்தை துவக்க காத்திருந்த மக்கள், இரண்டாம் நாளில் இருந்து கோவைக்கு செல்ல துவங்கியுள்ளனர்.இதே நிலை நீடித்தால், 50 சதவீதம் பஸ்கள் இயக்கம்; அதில், 60 சதவீதம் பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்வது நடைமுறையில் சாத்தியப்படாது.எனவே, கோவைக்கு கூடுதல் எண்ணிக்கையில் பஸ்கள் இயக்குவது, ரயில் சேவையை துவங்குவது மற்றும் நோய் பரவல் தடுப்பு முறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.



உடுமலை : உடுமலையில், குறைந்தளவு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால், திருப்பூர், பொள்ளாச்சி உட்பட பெரும்பாலான வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து, பாதிப்பு ஏற்பட்டது.உடுமலையிலிருந்து, 26 டவுன் பஸ்களும், 15 புறநகர் பஸ்கள் என, 41 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. முதல் நாளில் பயணிகள் இல்லாமல் பஸ்கள் ஓடின; ஒரு லட்சம் ரூபாய் மட்மே கட்டணம் வசூலானது.இதனையடுத்து, நேற்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்கள் எண்ணிக்கையை குறைத்தனர்.



பெரும்பாலான வழித்தடங்களில் டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டு, பிரதான வழித்தடங்களில், 8 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால், பஸ்கள் வராததால், கிராம மக்கள் ஏமாற்ற மடைந்தனர்.இயக்கிய வழித்தடங்களிலும், ஒரு டவுன் பஸ் மட்டுமே ஓடியதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் காத்திருந்தனர்.அதே போல், 25 புறநகர் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பனியன் கம்பெனிகளுக்கு செல்பவர்கள், பஸ் வசதியில்லாமல், பல மணி நேரம் காத்திருந்தனர்.



பொள்ளாச்சி, கோவைக்கும் குறைந்தளவு பஸ்கள் இயக்கப்பட்டதால்,பயணிகள் கூட்டம் அபரிமிதமாக காணப்பட்டது.ஊரடங்கு முடிந்து, சகஜ நிலை திரும்பி வரும் நிலையில், முறையாக பஸ் வரும் என மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், பொது போக்குவரத்து சேவையை கருத்தில் கொண்டும், அனைத்து வழித்தடங்களிலும்,கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.-

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X