| பட்ஜெட்டில் மக்கள் நலத் திட்டங்கள்தேர்தலை எதிர்கொள்ள முதல்வர் வியூகம் Dinamalar
பட்ஜெட்டில் மக்கள் நலத் திட்டங்கள்தேர்தலை எதிர்கொள்ள முதல்வர் வியூகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
04:20

புதுச்சேரி; பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை தெரிவிக்குமாறு, எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.புதுச்சேரி சட்டசபை கடந்த மார்ச் மாதம் கூடியபோது, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் 2020-21ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தி, வெற்றி பெறும் அரசு மே மாதத்தில் பொறுப்பேற்க உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. புதிய அரசு அமைந்த பிறகே முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சூழல் உள்ளது.எனவே, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்., ஆட்சியின் நிறைவு பட்ஜெட்டாக நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் உருவெடுத்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் என்பதால் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்க முதல்வர் நாராயணசாமி திட்டமிட்டுள்ளார்.குறிப்பாக, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வசதியாக அனைத்து தரப்பினரையும் கவரும் பல்வேறு அறிவிப்புகளை இடம் பெற செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.எனவே, பட்ஜெட் சிறப்பாக அமைவதற்காக ஆலோசனைளையும், கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டு அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கும் முதல்வர் நாராயணசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவும் ஆலோசனைகளை வரும் 5ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X