| போலீஸ் டைரி Dinamalar
போலீஸ் டைரி
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
06:32

டூ - வீலர்கள் திருடியோர் கைது



கனகம்மாசத்திரம்: திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு, திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த ராம்தாஸ், 38, என்பவர், 'ஸ்பிளன்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தை, நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார்.காலையில் எழுந்து பார்த்த போது, வாகனத்தை காணவில்லை. இது குறித்து, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த நிலையில், ஆற்காடுகுப்பம் பஸ் நிறுத்தத்தில், போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர்.அப்போது, ராம்தாசின் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள், அரக்கோணம் உசேன், 22, திருத்தணி ஞானசேகர், 21, என, தெரிய வந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து, இரண்டு, இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.



மூதாட்டி தீக்குளித்து சாவு



திருத்தணி: திருத்தணி அடுத்த, அகூர் காலனி சேர்ந்தவர் பத்மா, 61. இவர், தனியாக வசித்து வந்தார். தற்போது, ஊரடங்கால், பசி மற்றும் தனிமை வாட்டியதால், மனமுடைந்த மூதாட்டி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை, உடல் மேல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, பத்மா இறந்தார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.



டூ - வீலரில் சென்றவர் பலி



சுங்குவார்சத்திரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 54; தனியார் தொழிற்சாலை ஊழியர். சுங்குவார்சத்திரம் அருகே எடையார்பாக்கத்தில் இருந்து, நேற்று முன்தினம், இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.ஏகனாபுரம் கிராமத்தை கடந்த போது, தடுமாறி விழுந்ததில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.



'போக்சோ'வில் வாலிபர் கைது



வாலாஜாபாத்: காஞ்சிபுரம் அடுத்த, கனிகாபுரம் இந்திரா நகரைச்சேர்ந்த சிறுமியை, அதே பகுதியைச்சேர்ந்த சந்தோஷ், 21, என்பவர், நேற்று முன்தினம், பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார், சந்தோசை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X