| படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி Dinamalar
படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
06:33

கடம்பத்துார்: கடம்பத்துார் பகுதியில், கடையின் படிக்கட்டில் ஏறியவர், தவறி விழுந்ததில் இறந்தார்.



கடம்பத்துார், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் குப்பன், 59. அவர், நேற்று முன்தினம், சூர்யா நகர் பகுதியில் உள்ள உறவினர் கடைக்கு சென்றுள்ளார்.அப்போது, கடையின் படிக்கட்டில் ஏறும் போது, திடீரென கால் தடுமாறி விழுந்தார். அதில், தலையில் படுகாயமடைந்த அவரை, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து, கடம்பத்துார் போலீசில், அவரது மனைவி செஞ்சியம்மாள் அளித்த புகாரையடுத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X