| வாலிபரை குத்திய இருவர் சுற்றிவளைப்பு Dinamalar
வாலிபரை குத்திய இருவர் சுற்றிவளைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
06:40

எண்ணுார் : முன்பகையால், வாலிபரை கத்தியால் குத்திய, இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்ற இருவரை தேடி வருகின்றனர்.



எர்ணாவூர், எர்ணீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 21. நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்களான, சூர்யா மற்றும் சசி ஆகியோருடன், வீட்டருகே உள்ள, 'அம்மா' உணவகம் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அங்கு வந்த, நான்கு பேர் கும்பல், அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியது. பயந்து போன, சூர்யா மற்றும் சசி அங்கிருந்து ஓடி விட்டனர்.சதீஷிடம் தொடர்ந்து, தகராறு செய்த கும்பல், கத்தியால் முதுகில் குத்தி தப்பியது. இதில் காயமடைந்த சதீஷ், ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.



விசாரித்த எண்ணுார் போலீசார், தாக்குதலில் தொடர்புடைய, அதே பகுதியைச் சேர்ந்த சரவண பிரகாஷ், 20, சரத், 23, ஆகியோரை, கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், காயமடைந்த சதீஷின் நண்பரான சூர்யாவும், பழைய குற்றவாளியான நாகராஜும், 2016ல் நடந்த கொலை ஒன்றில் தொடர்புடையவர்கள்.



நாகராஜ் தற்போது, குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருந்திய சூர்யா, மற்ற நண்பர்களுடன் சுதந்திரமாக வெளியில் சுற்றி திரிவதை அறிந்த நாகராஜ், தன் கூட்டாளிகளை வைத்து, சூர்யாவை தாக்க முற்பட்டு, சதீஷை கத்தியால் வெட்டியது தெரிய வந்தது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X