தவணை கேட்டு தொழிலாளர்களை மிரட்டும் நிதி நிறுவனங்கள்: அதிகரிக்கும் குற்றச்சாட்டு; மாவட்ட நிர்வாகம் தீர்வு காணுமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
08:17

ஈரோடு: அரசு உத்தரவை மீறி, நிதி நிறுவனங்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக, ஈரோடு மாவட்டத்தில் புகார் அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காண, ஏழை எளிய மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


சென்னிமலை அருகே அம்மாபாளையத்தை சேர்ந்த மகளிர் குழுவினர், மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: பெருந்துறையை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில், மகளிர் குழுவுக்காகவும், தனி நபர்களும் கடன் பெற்றுள்ளோம். கொரோனா ஊரடங்குக்கு முன்புவரை, முழு அளவில் வட்டி மற்றும் தவணை செலுத்தியுள்ளோம். கொரோனா ஊரடங்கால், வேலை இல்லாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வட்டி, தவணையை செலுத்த முடியவில்லை. இதுகுறித்து விளக்கமாக நிதிநிறுவனத்தில் தெரிவித்து விட்டோம். ஆனால், நிதி நிறுவனம் சார்பில் சூர்யா, ராஜசேகர் உட்பட பலர், உடனடியாக வட்டி மற்றும் பணம், கூடுதல் தொகையை செலுத்துமாறு மிரட்டுகின்றனர். வரும் செப்., மாதத்துக்கு பின், இயல்பு நிலை திரும்புமென எதிர்பார்க்கிறோம். அதுவரை வட்டி கேட்காமல், தவணை தொகையை செப்., மாதம் முதல் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


பவானிசாகரிலும் குற்றச்சாட்டு: பவானிசாகர் சுற்றுவட்டார பகுதியில், விவசாய கூலி, கட்டுமானம், நெசவு மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள், குடும்ப தேவைக்காக, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். ஊரடங்கால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்நிலையில் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமம், அண்ணாநகர் பகுதியில், மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், வீடுகளுக்கு சென்று கட்டாய வசூலில் இறங்கி, பெண்களை மிரட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. தொட்டம்பாளையம் கிராம மக்கள் கூறியதாவது: வங்கிகள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் பெற்ற கடன் தொகையை, மூன்று மாதங்களுக்கு திருப்பி செலுத்த வேண்டியதில்லை என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அரசின் உத்தரவு தங்களுக்கு பொருந்தாது எனக்கூறி மிரட்டுகின்றனர். தாமதமாக செலுத்தினால் ஏற்கனவே போடப்பட்டுள்ள வட்டிக்கு கூடுதல் வட்டி வசூல் செய்யப்படும் என பயமுறுத்துகின்றனர். அரசு உத்தரவை மீறும், இவர்கள் மீது, ஈரோடு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.


பொதுமக்களிடம் பாய்ச்சல்; நிறுவனங்களிடம் பதுங்கல்: ஈரோட்டில் செயல்படும், பஜாஜ் நிதி நிறுவனம், மத்திய அரசின் உத்தரவை மீறி, தவணை தொகை வசூலிப்பதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், நேற்று முன்தினம் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். பேச்சுவார்த்தைக்கு சென்ற போலீசார், கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்று கூறி, நிறுவனத்தை பூட்டினர். மாநகராட்சி அதிகாரிகளோ, சீல் வைத்தனர். ஆனால், முற்றுகையிட்ட வாடிக்கையாளர்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டால், அதை நிறுவனங்கள் கடைப்பிடிக்கிறதா? என்பதை அதிகாரிகள் தானே கண்காணிக்க வேண்டும். அதை விடுத்து, மக்களின் பிரச்னைக்கு தீர்வை காணாமல், தள்ளிப்போடுவதில் என்ன நியாயம்? கொரோனா தடுப்பில், மாஸ்க் அணியாமல் வந்தால், அபராதம், கைது நடவடிக்கை என, பொதுமக்கள் மீது பாயும் அதிகாரிகள், அரசுகளின் உத்தரவை அப்பட்டமாக மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பதுங்கி, பம்முவது வேதனையளிப்பதாக, ஏழை, எளிய மக்கள் குமுறல் தெரிவித்துள்ளனர்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X