தொழிலாளி முதுகில் பாய்ந்த 'ஸ்குரு டிரைவ்': அரசு மருத்துவ குழுவினர் அகற்றி அசத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
08:31

சேலம்: 'ஸ்குரு டிரைவ்' குத்தப்பட்ட நிலையில், தொழிலாளி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதை, மருத்துவ குழுவினர், நான்கு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.


சேலம், கந்தம்பட்டி, மேம்பாலம் நகர், எட்டிமரத்துப்பட்டியைச் சேர்ந்த, ராமச்சந்திரன் மகன் சின்ராஜ், 30; கட்டட தொழிலாளியான இவர், திருமணம் ஆகாதவர். கடந்த, 20ல், ஒரு மோதலில், அவரது கீழ் முதுகில், கூர்மையான, 'ஸ்குரு டிரைவ்' ஆயுதத்தால் குத்தப்பட்டார். உடனே, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், 'ஸ்குரு டிரைவ்' ஒரு செ.மீ., விட்டம், 15 செ.மீ., ஆழத்தில் பாய்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, முதுகெலும்பு வழியாக ஊடுருவி, அடி வயிறு பகுதி வரை பாய்ந்துவிட்டது. நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சங்கர் தலைமையில் மருத்துவர்கள் பிரகதீஷ், ராமமூர்த்தி, கண்ணன், நாகராஜ் அடங்கிய குழுவினர், நான்கு மணி நேரம் போராடி, கூர்மையான ஆயுதத்தை, முதுகிலிருந்து அகற்றினர். தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்ட சின்ராஜ் உடல்நிலை தேறி குணமானார். டீன் பாலாஜிநாதன் கூறுகையில், ''தனியார் மருத்துவமனையில், இந்த அறுவை சிகிச்சைக்கு, எட்டு லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை செலவாகி இருக்கும். அரசு மருத்துவமனையில், இலவசமாக அறுவை சிகிச்சை செய்து, நோயாளியை காப்பாற்றியுள்ளோம்,'' என்றார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
03-ஜூன்-202014:23:12 IST Report Abuse
SENTHIL NATHAN மருத்துவர்கள் வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X