நாமக்கல்லில் இருந்து வடமாநில தொழிலாளர் சேலத்துக்கு படையெடுத்து வந்த பின் ஏமாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
08:32

சேலம்: மண்டலங்கள் இடையே அரசு பஸ்களின் இயக்கம் தொடங்கியதால், நாமக்கல்லில் இருந்து வடமாநில தொழிலாளர்கள், சேலத்துக்கு வந்தனர். அங்கு வந்த பின், ரயில்கள் இயக்கப்படாதது தெரிந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.


மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், பீஹார், ஒடிசா, மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள், நாமக்கல் மாவட்டத்தில், கோழிப்பண்ணை, விவசாய பணி, சேகோ ஆலைகள், லாரி பட்டறைகளில் பணிபுரிந்தனர். ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த அவர்களில், 20 சதவீதத்தினர், லாரிகள் மட்டுமின்றி, மாவட்ட நிர்வாக பரிந்துரைப்படி, பஸ், ரயில்கள் மூலம் சொந்த ஊர் சென்றனர். மீதி தொழிலாளர், சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த நிலையில், நேற்று முன்தினம் முதல், பொது போக்குவரத்து தொடங்கியது. இதனால், அவர்கள், ரயில் மூலம் சொந்த ஊருக்கு செல்ல, அரசு பஸ்களில் சேலம் வந்தனர். பின், ரயில்கள் இயக்கப்படாதது தெரியவந்ததால், அதிர்ச்சியடைந்த, 60க்கும் மேற்பட்டோர், கொண்டலாம்பட்டி பைபாஸில் நின்றிருந்தனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி முகாமுக்கு அனுப்பினர். விரைவில், அரசு பஸ்சில், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர். அதேபோல், நேற்று முன்தினம், 300 பேர் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்தனர். திருப்பூர், கோவையில் இருந்து, 200 பேர் சேலம் வந்தனர். அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி, முகாம்களில் தங்க வைத்துள்ளனர். பொது போக்குவரத்து தொடங்கியதால், சேலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுவதாக, அந்த தொழிலாளர்கள் இடையே தவறான தகவல் பரவியதால், நாமக்கல், திருப்பூர் பகுதியில் இருந்து, சேலத்துக்கு வருகின்றனர். அதனால், ரயில்களின் இயக்கம் தடைபட்டுள்ளது குறித்து, வடமாநில தொழிலாளருக்கு, அந்தந்த மாவட்ட போலீசார், வருவாய்த்துறையினர் தெரிவிக்க, சேலம் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X