விற்பனை விலையை நிர்ணயிக்க 'நெக்' அமைப்புக்கு வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
09:11

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வதில், குளறுபடி காரணமாக, பண்ணையாளர்கள் குழப்பான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், விற்பனை செய்யும் விலையை, கொள்முதல் விலையாக, 'நெக்' நிர்ணயம் செய்ய வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.


கொரோனா பாதிப்பு காரணமாக, முட்டை விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது, கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது. ஆனால், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (நெக்), பண்ணையாளர்கள், வியாபாரிகள், இடைத்தரகர்கள் என, ஆளாளுக்கு விலையை நிர்ணயம் செய்வதால், பண்ணையாளர்கள் மத்தியில், குழப்பம் நீடித்து வருகிறது.


இதுகுறித்து, பண்ணையாளர்கள் சிலர் கூறியதாவது: கொள்முதல் விலையை, 'நெக்' உயர்த்தினாலும், அதில் இருந்து, 40 காசு குறைத்து கொள்முதல் செய்கின்றனர். பண்ணையாளர்கள் யாரும், 'மைனஸ்' விலையை விரும்ப வில்லை. முட்டை தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை உயர்த்த வேண்டும். இது, வியாபாரிகளுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது. பண்ணையாளர்களுக்கு இல்லை. ஒரு சில பண்ணையாளர்கள், 40, 50, 55 காசு வரை குறைத்து விற்பனை செய்கின்றனர். யாருக்கு என்ன விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என தெரியவில்லை. முட்டையை பொறுத்தவரை, 'நெக்' ஒரு விலையும், வியாபாரிகள் சங்கம் மற்றும் இரண்டு அமைப்பு, பண்ணையாளர்களும் ஒரு விலையை நிர்ணயம் செய்கின்றனர். அதனால், குழப்பமான சூழ்நிலைக்கு, பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். என்ன விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படுகிறதோ அந்த விலையை, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நிர்ணயம் செய்ய வேண்டும். பெரும்பாலான வியாபாரிகள், பண்ணைகளில் இருந்து முட்டையை எடுத்து சென்று விட்டு, ஒரு வாரத்துக்கு விலையை சொல்வதில்லை. அதனால், ஒரு வாரத்துக்கு பின், 'நெக்' விலையில் இருந்து, 50 காசு குறைத்து வழங்குகின்றனர். அவற்றை தவிர்க்க, 'நெக்' விலைக்கு அன்றைக்கே, 'பில்' போட்டு விற்பனை செய்ய வேண்டும். அதேபோல், ரசீது இல்லாமல், பண்ணைக்காரர்கள் முட்டை விற்பனை செய்கின்றனர். யாரும், 'பில்' இல்லாமல் விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தனித்தனியாக விலையை நிர்ணயம் செய்வதால், பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதாவது, ஒரு முட்டைக்கு, 20 முதல், 30 காசு வரை நஷ்டம் ஏற்படும். அதன் மூலம், தினமும், எட்டு லட்சம் வீதம், மாதத்துக்கு, 2.50 கோடி ரூபாய், ஆண்டுக்கு, 30 கோடி ரூபாய் பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த தொகை, பண்ணையாளர்களுக்கு வராமல், வியாபாரிகளுக்கு செல்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Chinniah - sivagangai,இந்தியா
05-ஜூன்-202012:13:49 IST Report Abuse
Selvaraj Chinniah விவசாயிகள் உற்பத்தி செய்யும் எந்த பொருளுக்கும் விலை நிர்ணயம் செய்வது. இடைத்தரகர்களும், வியாபாரிகளும். ஏன் இந்த அவல நிலை? நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் என்று சொல்வதெல்லாம் வாய் வார்த்தைதான். உதாரணமாக இப்போது கோரோனோ காலம். விவசாயி உற்பத்தி செய்யும்.வாழை இலையை என்ன செய்வது? சிறு விவசாயிகள் படும் துயரம் சொல்லி மாளாது. சம்பந்தப்படடவர்களின் பார்வைக்கு தினமலர் எடுத்து சென்றால், விவசாயிகள் நன்றி உள்ளவர்களாக இருப்போம். நன்றி.வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X