ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம்சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
21:58

விழுப்புரம் : தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் சங்கங்களுக்கு சிறப்பு நிதியுதவி தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.



கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு:தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் திட்ட ஊராட்சிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில்களை மேம்படுத்துவது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதாரத் தொழிலை மேம்படுத்துவதற்கு, ஊரக புத்தாக்கத் திட்டத்தில் 300 கோடி ரூபாயில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது.



இத்திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் ஆறு வட்டாரங்களைச் சேர்ந்த 322 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சிறப்பு நிதி உதவித் தொகுப்பின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 20.98 கோடி ரூபாய் மதிப்பில் 5,463 பயனாளிகள் பயன்பெறக் கூடிய வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவித் தொகுப்பு செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தின் மூலம், 2,576 பேருக்கு, நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 12.88 கோடி ரூபாய் நீண்ட கால தனி நபர் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும். 129 உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 12,900 பேர் பயன்பெற ஒருமுறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 1.935 கோடி ரூபாய் வழங்கப்படும்.குழு ஒன்றுக்கு 5 பயனாளிகள் அடங்கிய 12 தொழில் குழுக்களுக்கு (ஆடை தயாரிப்பு, பால் பொருட்கள் உற்பத்தி, கலைப் பொருட்கள் உற்பத்தி போன்றவை) தலா ( 60 பேர்) 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 18 லட்சம் ரூபாய் ஒருமுறை மூலதன மானியமாக வழங்கப்படும்.புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த திறன்பெற்றவர்களில் வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 1.67 கோடி ரூபாய் நீண்ட கால கடனாக வழங்கப்படும்.



இத்திட்டத்தில் பயன்பெற விக்கிரவாண்டி, கோலியனுார், முகையூர், காணை, திருவெண்ணெய்நல்லுார் மற்றும் வல்லம் வட்டாரங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் மாவட்ட ஊரகப் புத்தாக்கத் திட்டம், விழுப்புரம் மாவட்டம், 365, இந்திராகாந்தி சாலை, சுதாகர் நகர், விழுப்புரம் -605 602 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X