| ஜனநாயக வாலிபர் சங்கம்விழுப்புரத்தில் ரத்த தானம் Dinamalar
ஜனநாயக வாலிபர் சங்கம்விழுப்புரத்தில் ரத்த தானம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
21:58

விழுப்புரம் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாம் நடந்தது.



விழுப்புரம் மாவட்ட மா.கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அறிவழகன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி முகாமை துவக்கி வைத்தார். அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்கள் ரம்யா, மூர்த்தி, செவிலியர்கள் சசிகலா, சத்தியநாராயணன், ஆய்வகர் கலையரசி ஆகியோர் ரத்தம் சேகரிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், சுமை துாக்கும் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் குமார், சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் முத்துகுமரன் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X