| காய்கறி மார்க்கெட்டில் பேவர் பிளாக் சாலை Dinamalar
காய்கறி மார்க்கெட்டில் பேவர் பிளாக் சாலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
21:59

திண்டிவனம் : திண்டிவனம் காய்கறி மார்க்கெட் பகுதியில் சேரும் சகதிமாக இருந்த இடத்தில் பேவர் பிளாக் சாலை போடும் பணி துரிதமாக நடந்து வருகிறது.



திண்டிவனம் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள நேரு வீதி மற்றும் சுப்ரமணிய சுவாமி கோவில் தெரு, மழைக்காலத்தில் சேரும், சகதியுமாக காணப்படும். இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.இந்நிலையில், திண்டிவனம் நகராட்சி சார்பில், சுப்ரமணிய சுவாமி கோவில் தெருவில், 9.75 லட்சம் ரூபாய் செலவில், பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பேவர் பிளாக் பொருத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.



இதன் மூலம், அதிகளவில் காய்கறி கடைகள் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் தெருவில், மழைக்காலங்களில் சேரும், சகதியும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்காது.மழைநீர் அனைத்தும் தேங்காத அளவிற்கு பூமிக்குள் சென்றுவிடும் என நகராட்சி தரப்பில் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X