உருது பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
உருது பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
22:00

செஞ்சி : செஞ்சி உருது உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது.



விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சக்கராபுரம் உருது உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள நடும் விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியேற்பு மற்றும் கபசுரகுடிநீர் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடந்தது.விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி மரக்கன்று நட்டு, கபசுர குடிநீர் வழங்குவதை துவக்கி வைத்தார். செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் நடராஜன், விழுப்புரம் மாவட்ட தேசிய பசுமைப் படை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன் மற்றும் பாலசுப்ரமணியன், செஞ்சி கல்வி மாவட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X