| மாவட்ட காங்., விவசாய பிரிவுகலெக்டரிடம் கோரிக்கை மனு Dinamalar
மாவட்ட காங்., விவசாய பிரிவுகலெக்டரிடம் கோரிக்கை மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
22:01

விழுப்புரம்: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.



விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., விவசாய பிரிவு சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனு:கொரோனா ஊரடங்கு உத்தரவால், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெட்டுக்கிளிகள் பரவல் விவசாயிகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்காமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.எனவே, விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X