| மூதாட்டியை தாக்கிய4 பேர் மீது வழக்கு Dinamalar
மூதாட்டியை தாக்கிய4 பேர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
22:02

விழுப்புரம்: கள்ளத்தொடர்பை கண்டித்த மூதாட்டியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.



விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூரைச் சேர்ந்தவர் ராஜி, 45; இவருக்கும் கொய்யாத்தோப்பைச் சேர்ந்த கமலம்மாள், 77; என்பவரின் மருமகளுக்கும் உள்ள கள்ளத் தொடர்பை கமலம்மாள் கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ராஜி, இவரது மனைவி லதா, 40; மற்றும் கமலம்மாளின் மருமகள், இவரின் தங்கை குணா, 38; ஆகியோர் கமலம்மாளை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், ராஜி உட்பட 4 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து ராஜியை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X