| 'மாஸ்க்' அணியாமல் சென்ற 34 பேருக்கு அபராதம் விதிப்பு Dinamalar
'மாஸ்க்' அணியாமல் சென்ற 34 பேருக்கு அபராதம் விதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
22:13

கிள்ளை : கிள்ளையில், முக கவசம் அணியாமல் பைக்கில் சென்ற 34 பேருக்கு, பேரூராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.



கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, வெளியில் செல்பவர்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வெளியில் செல்பவர்கள், கட்டாயம் முக கவசம் அணிந்துச் செல்ல வேண்டும் என அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று கிள்ளை கடைத் தெருவில், செயல்அலுவலர் தங்கவேல் தலைமையில் ஊழியர்கள் மற்றும் போலீசார் கண்காணித்தனர்.அப்போது, பைக்கில் முக கவசம் அணியாமல் சென்ற 34 பேருக்கு, தலா 100 ரூபாய் என 3 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X