கடலுாரில் மீன்பிடிக்க தயாராகும் விசைப்படகுகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
22:15

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் நாளை மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ள நிலையில், படகுகளில் ஐஸ் மற்றும் வலைகளை ஏற்றுவது என, தயாராகி வருகின்றனர்.



கொரோனா தடுப்பு ஊரடங்கால் கடலுார் மாவட்டத்தில் மார்ச் 20ம் தேதிக்கு பிறகு மீன்பிடி தொழில் முடங்கியது. தடைக்காலமும் ஏப்., 15ம் தேதி அமலுக்கு வந்ததால், மாவட்டத்தில் நல்லவாடு முதல் சிதம்பரம் அருகே டி.எஸ்.பேட்டை வரை 49 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் விசை படகுகளில் மீன்பிடிக்க செல்லவில்லை. தடைக்காலம் குறைக்கப்பட்டு, கடந்த 1ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகினர்.



அதற்கேற்ப மீன்வளத்துறை அதிகாரிகளும் படகுகளை ஆய்வு செய்து, டோக்கன் சிஸ்டம் பயன்படுத்துவது, குறிப்பிட்ட நாட்களில் திரும்புவது, கூடுதல் திறன் இன்ஜின்களை பயன்படுத்தக்கூடாது என, அதிகாரிகள் தரப்பில் விதிமுறைகளை கடைபிடிக்க மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதில் சில நிபந்தனைகளை மீனவ சங்க பிரநிதிகள் ஏற்றுக்கொள்ளாதது மற்றும் வெளி மாநில மீன் வியாபாரிகள் வருவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர்.



இந்நிலையில், அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து இழுபறிக்கு தீர்வு கிடைத்துள்ளதால், நாளை (8 ம் தேதி) முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர்.அதற்காக, கடலுார் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் வலைகளை ஏற்றுவது, ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை படகுகளில் ஏற்றுவது உள்ளிட்ட ஆயத்த ஏற்பாடுகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X