| ஆலோசனை குழு உறுப்பினர்கள் நியமனம் Dinamalar
ஆலோசனை குழு உறுப்பினர்கள் நியமனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
22:16

கடலுார் : கடலுார் மேற்கு மாவட்டத்திற்கு வங்கிகளின் மூலம் தொழில் செய்வோருக்கான மாவட்ட அளவில் ஆலோசனை குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., மாநிலத் தலைவர் முருகன் வழிகாட்டுதல்படி, மாநில அமைப்பு பொதுச் செயலர் கேசவன் விநாயகம், பெருங்கோட்ட பொறுப்பாளர் முருகானந்தம் ஆகியோரின் ஒப்புதல்படி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பரிந்துரைப்படி கடலுார் மேற்கு மாவட்டத்திற்கு வங்கிகளின் மூலம் தொழில் செய்வோருக்கான மாவட்ட அளவிலான ஆலோசனை குழு உறுப்பினர்களை மேற்கு மாவட்டத் தலைவர் இளஞ்செழியன் நியமித்துள்ளார்.அதன்படி, மாவட்ட நிர்வாகக் குழு தலைவராக கிேஷார்குமார், உறுப்பினர்களாக சத்தியமூர்த்தி, ஜோதிராஜ், சண்முகம், ரவிராஜன், விநாயகமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன், லட்சுமணன், ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X