போலீஸ்டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
23:25

விபத்தில் வாலிபர் பலி



ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், செங்காத்தாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர், 30. கடந்த, 27ல் வேலைக்குச் சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது, செங்காத்தாகுளம் அருகில் ஒரு வயல்வெளியில் விழுந்து விட்டார்.இதில், வயிற்றில் காயம் ஏற்பட்டதால், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று இறந்தார்.



லாரியில் ஷாம்பூ திருட்டு



ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு, பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து, ஷாம்பூ ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று வந்தது.லாரியில் ஏறி, சரக்கு இறக்க சென்றபோது, தார்பாய் கிழிக்கப்பட்டு, 42 பெட்டி ஷாம்பூ காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து, லாரி ஓட்டுனர், கலைசெல்வன், 55, பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வழிப்பறி திருடர்கள் கைதுமீஞ்சூர்: மீஞ்சூர் போலீசார், கொண்டக்கரை அருகே, வாகன சோதனையில் நேற்று, ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேக நபர்கள் இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள், சென்னை, தண்டையார்பேட்டை ராஜசேகர், 28, புளியந்தோப்பு விஜயகுமார், 22, என்பதும், பல்வேறு கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்பதும் தெரிந்தது.மேலும், சென்னை, கலெக்டர் நகரை சேர்ந்த பாஸ்கர், 42, என்பவரது செயினை பறித்துக் கொண்டு வரும்போது போலீசாரிடம் சிக்கியதும் தெரிந்தது.



இரு ரவுடிகளுக்கு சிறை



காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், பல்லவர்மேடு கிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகர், 25, மீது இரு கொலை, ஆறு கொலை முயற்சி வழக்குகள் உட்பட, 16 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, காஞ்சிபுரம் கிளை சிறையில், நேற்று அடைக்கப்பட்டார்.அதேபோல், பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், 23, என்ற ரவுடியும், குற்றவியல் நடைமுறை சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.



வீட்டில் வெடிகுண்டு பறிமுதல்



நகரி: சித்துார் மாவட்டம், பிச்சாட்டூர் அடுத்த, கோவர்த்தனகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 26; விவசாயி. இவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பிச்சாட்டூர் போலீசார் நேற்று முன்தினம், அய்யப்பன் வீட்டில் சோதனை செய்த போது, மூன்று நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்; அவரை கைது செய்தனர். விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து நாசம் செய்வதை தடுக்க, நாட்டு குண்டுகள் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.



விபத்தில் வங்கி ஊழியர் பலி



நகரி: சித்துார் மாவட்டம், காளஹஸ்தி, கோவனுார் பகுதியில் உள்ள, பாரத ஸ்டேட் வங்கியில், ஊழியராக பணியாற்றி வந்தவர் தனபால், 30.இவர், நேற்று முன்தினம், சைக்கிளில், காப்புகுன்னேரி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில், வங்கி ஊழியர், சம்பவ இடத்திலேயே இறந்தார். காளஹஸ்தி போலீசார் விசாரிக்கின்றனர்.



வாலிபர் தற்கொலை



வெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த, குண்டுமேடு, புதுவட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சதீஷ், 26. இவருக்கு, மனைவி, சரண்யா, 26 உள்ளார்.குடிப்பழக்கத்திற்கு அடிமையான சதீஷ், கடந்த, 4 இரவு, மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, சரண்யா, தன் குழந்தையுடன் வீட்டின் வெளியே துாங்கி விட்டார்.காலையில் எழுந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, சதீஷ் மின் விசிறியில் துாக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் உதவியுடன் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து, வெள்ளவேடு போலீசில், சரண்யா அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X