| மக்களை அலைக்கழிப்பதாக தாசில்தார் மீது குற்றச்சாட்டு Dinamalar
மக்களை அலைக்கழிப்பதாக தாசில்தார் மீது குற்றச்சாட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
23:35

குன்றத்துார் : குன்றத்துார் தாலுகா அலுவலகத்தில், பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களை, தாசில்தார், நீண்ட நேரம் காக்க வைப்பதோடு, முறையான பதில் கூறாமல் விரட்டுவதாக, புகார் எழுந்துள்ளது.



ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலகத்தில் இருந்து, குன்றத்துாரை தனியாக பிரித்து, குன்றத்துார் தாலுகா அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டது.இந்த அலுவலகத்திற்கு, பல விதமான தேவைகள், கோரிக்கைகளை முன்வைத்து, நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.ஆனால், அங்கு, போதிய வசதிகள் இல்லை. பொதுமக்கள், அமருவதற்கு இருக்கை வசதி இல்லை. மணிக்கணக்கில் நின்றுகொண்டே இருக்க வேண்டியுள்ளது. கழிப்பறையும் முறையாக பராமரிப்பதில்லை. அதுபோல, பொதுமக்கள் யாராவது வந்தால், தாசில்தாரை சந்திக்க, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்படியே சந்தித்தாலும், முறையான பதில் கூறாமல், விரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கொரோனா பரவலை தடுக்க, அலுவலகத்தில், கிருமி நாசினிபயன்படுத்துவதே இல்லை என்றும் கூறப்படுகிறது. ஊழியர்களும் தரக்குறைவாக நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X