| கர்ப்பிணிக்கு தொற்று இருக்கா, இல்லையா? மாநகராட்சி, தனியார் சோதனைகளில் முரண்! Dinamalar
கர்ப்பிணிக்கு தொற்று இருக்கா, இல்லையா? மாநகராட்சி, தனியார் சோதனைகளில் முரண்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2020
23:41

மாதவரம் : பரிசோதனையின் குழப்பமான முடிவுகளால், மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்க, அவற்றை, சுகாதாரத் துறையினர், உரிய கவனத்துடன் வெளியிட வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.



சென்னை, மாதவரம், தணிகாசலம் நகரைச் சேர்ந்த, 26 வயது இளம்பெண், நிறைமாத கர்ப்பிணி. அவருக்கு, அடுத்த, 10 நாட்களில், குழந்தை பிறக்க உள்ளது என்பதால், புழல் காவாங்கரையில் உள்ள, தாய் வீட்டில் இருந்தார்.தடுப்பு நடவடிக்கைஜூன், 2ல், புழல், காந்தி பிரதான சாலையில் உள்ள, மாநகராட்சி மருத்துவமனையில், அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில், அவருக்கு தொற்று இருப்பதாக, நேற்று முன்தினம் காலை, சுகாதாரத்துறையினர் மூலம், தகவல் தெரிவிக்கப்பட்டது.



அந்த கர்ப்பிணியோ, 'கபசுரக் குடிநீர், மூலிகை தேநீர், சமூக இடைவெளி உள்ளிட்ட, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, கவனமாக கடைப்பிடித்து வருகிறேன். எனக்கு தொற்று பரவ வாய்ப்பில்லை. பரிசோதனை முடிவை, சரியாக பாருங்கள்' என்றார்.ஆனால், அவரது பேச்சை அவர்கள் ஏற்க வில்லை. 'உங்களை அழைத்துச் செல்ல வருகிறோம். தயாராக இருங்கள்' என்றனர்.இதையடுத்து, அந்த கர்ப்பிணி, தன் பெற்றோருடன், புழலில் உள்ள, தனியார் மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.அதன்பின், வீட்டில் இருந்தவரை, மாநகராட்சி சுகாதாரத் துறையினர், வட சென்னையில் உள்ள, அரசு மகப்பேறு மருத்துவமனையின் கொரோனா வார்டில் சேர்த்தனர். மேலும், அவரது வீட்டை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, 'ஸ்டிக்கர்' ஒட்டினர்.



நிம்மதி இழப்பு




இதனால், அவர் நேற்று முன்தினம் இரவு, துாங்க முடியாமல் சோர்வடைந்தார். மகப்பேறு என்பதே, 'மறு ஜென்மம்' போன்றது. இதில், தனக்கு கொரோனா தொற்று என்றும், அது பிறக்கப்போகும், தன் குழந்தையையும் பாதிக்கும் என்ற அச்சத்தால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது.



இந்நிலையில், அவருக்கு, தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவில், கொரோனா தொற்று இல்லை என, நேற்று காலை தெரியவந்து உள்ளது.இதனால், பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோர், குழப்பத்திற்கு ஆளாகினர். மாநகராட்சி, தனியார் பரிசோதனையில், எந்த முடிவை ஏற்பது என, நிம்மதி இழந்தனர்.



சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில், சில தினங்களாகவே, இதுபோன்ற குழப்பங்கள் அதிகரித்துள்ளன. மாநகராட்சியின் பரிசோதனை முடிவுகள், நோயாளிகளின் பெயர் ஆகியவை, மாறி மாறி வருவதால், கர்ப்பிணியர் உட்பட பலருக்கும், தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.இதனால், அவர்களும், அவர்களது குடும்பத்தினரும், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இனியாவது, கர்ப்பிணியர், குழந்தை பெற்றோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகளை, மிகவும் கவனமாக வெளியிட வேண்டும். அதே போன்று, தனியார் மருத்துவமனை பரிசோதனைகளையும், தகுதியானவையா என, ஆய்வு செய்ய வேண்டும்.சமூக ஆர்வலர்கள், புழல்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X